குளச்சல், அக். 13: மண்டைக்காடு புதூர் பகுதியை சேர்ந்தவர் தாசன் (65). மீனவர். இவர் சம்பவத்தன்று குளச்சல்- மணவாளக்குறிச்சி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த பைக், திடீரென தாசன் மீது மோதியது.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவர் மண்டைக்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் தாசன் மீது பைக்கில் மோதிய சஜன்பாபு என்பவர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.