நாகர்கோவில், ஆக.13 :நாகர்கோவில் வடிவீஸ்வரம் பெரிய தெருவில் வசித்து வருபவர் ராஜேஷ். இவரது மனைவி நந்தினி (24). கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சம்பவத்தன்று கோபித்துக் கொண்டு வெளியே சென்ற நந்தினி மாயம் ஆனார். பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. இது குறித்து ராஜேஷ், கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
+
Advertisement