மார்த்தாண்டம், நவ.12: விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் பல சாலைகள் மோசமாக காணப்படுகின்றன. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக உத்திரங்கோடு முதல் மஞ்சாலுமூடு, மெதப்பங்கோடு முதல் கைதகம், மஞ்சாலுமூடு முதல் அருமனை, அருமனை முதல் பனச்சமூடு வரையிலான சாலைகள் மிகவும் மோசமாக காணப்படுகின்றன. இந்த சாலைகளை தாரகை கத்பர்ட் எம்எல்ஏ நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் இணைந்து பார்வையிட்டார். அப்போது விளவங்கோடு தொகுதியில் மோசமான நிலையில் காணப்படும் சாலைகள் அனைத்தையும் மிக விரைவில் சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் சாலையை மேம்படுத்துவது குறித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் ராஜேந்திர பிரசாத், சுந்தர், முரளி, கமலன், முன்னாள் வட்டார தலைவர் சதீஷ், ராஜேஷ், சங்கரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
+
Advertisement
