மார்த்தாண்டம், நவ.12: வேர்க்கிளம்பி அருகே பூவன்கோடு வலியபிலாவிளையை சேர்ந்தவர் ஷெர்லின் செல்வசிங். இவரது மனைவி ஜெயந்தி (43). இவர்கள் தற்போது மார்த்தாண்டம் அருகே ஐரேனிபுரம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்தநிலையில், அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான ரோஸ்லின் (45) என்பவர் ஜெயந்தியின் வீட்டு காம்பவுண்டுக்குள் அத்துமீறி நுழைந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் ஆத்திரம் அடைந்த அவர் ஜெயந்தியை தகாத வார்த்தைகள் பேசி, பெண்மைக்கு களங்கம் ஏற்படும் வகையில் நடந்து கொண்டதோடு, கொலை மிரட்டலும் விடுத்து சென்றுள்ளார். இதனால் மனம் உடைந்த ஜெயந்தி மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரோஸ்லினை கைது செய்து சிறையில் அடைத்தனர். ரோஸ்லின் மீது கருங்கல், மார்த்தாண்டம் காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
+
Advertisement
