மார்த்தாண்டம் அக். 12: மார்த்தாண்டம் மதிலகத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணதாஸ். ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவர் மனைவியுடன் தரை தளத்தில் வசித்து வருகிறார். முதல் தளத்தின் மாடிப்படிகள் வெளிப்புறமாக உள்ளது. சம்பவத்தன்று நள்ளிரவு இரண்டு திருடர்கள் மாடி முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த ஒரு லட்சத்து 85 ஆயிரம் மதிப்புள்ள 2 பவுன் நெக்லசை திருடி சென்றுள்ளனர். அனைத்து அறைகளிலும் உள்ள அலமாரிகள் திறந்து பொருட்கள் சிதறி கிடந்தது. இதுகுறித்து கிருஷ்ணதாஸ் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement