கன்னியாகுமரி, அக். 12: கன்னியாகுமரி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் டேனியல் அருள்சேகர் தலைமையிலான போலீசார், சர்ச் ரோடு சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக பைக் ஓட்டி வந்த 16 வயது சிறுவனை, போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அதில் சிறுவன் லீபுரம் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இது தொடர்பான புகாரின்பேரில், போலீசார் சிறுவனின் தந்தை மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
+
Advertisement