நாகர்கோவில், டிச.11: நாகர்கோவில் மாநகராட்சி 32 வது வார்டில் ரூ.12.25 லட்சம் மதிப்பீட்டில் லூர்து அன்னை சாலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குடியிருப்பு முன் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணி, சகாய மாதா தெருவில் அலங்கார தரைகற்கள் அமைக்கும் பணி மற்றும் கோணம் அறிவுசார் மையத்தில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளை மேயர் மகேஷ் நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணைமேயர் மேரி பிரின்ஸி லதா, மண்டல தலைவர் செல்வகுமார், கவுன்சிலர் சிஜி பிரவின், உதவி பொறியாளர் அபிஷா, மாநகர செயலாளர் ஆனந்த், பகுதி செயலாளர் சேக்மீரான் உள்பட திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
+
Advertisement


