நாகர்கோவில், டிச.11: மாதர் இயக்கங்களின் கூட்டுக்குழு சார்பில் மனித உரிமைகள் தினத்தை ஒட்டி ஆர்ப்பாட்டம் நாகர்கோவிலில் வேப்பமூடு சந்திப்பில் நேற்றுநடைபெற்றது. குளோரி தொடக்கி வைத்தார். சாரதா தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி லீமாரோஸ், சுஜா ஜாஸ்மின் பேசினர். விஜயலட்சுமி முடித்து வைத்து பேசினார். வாழ்வுரிமை, சொத்துரிமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமை ஆகியவற்றை வழங்க வேண்டும். விலைவாசியை குறைத்திட வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
+
Advertisement


