தக்கலை போலீஸ் சப் டிவிஷனில் ஆட்டோக்களில் கியூஆர் கோடு ஸ்டிக்கர் ஒட்டும் பணி டிஎஸ்பி தொடங்கி வைத்தார்
தக்கலை, அக். 11: மாவட்ட காவல்துறை சார்பில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் குற்ற செயல்களை தடுக்கும் வகையில், கியூ ஆர் கோடு வெளியிடப்பட்டுள்ளது. இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அறிமுகப்படுத்தி, முதற்கட்டமாக 6 ஆயிரம் ஆட்டோக்களில் ஒட்டப்பட்டுள்ளது. இதனிடையே தக்கலை போலீஸ் சப் டிவிஷனில், ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வு அழகிய மண்டபத்தில் நடைபெற்றது. தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்டி தலைமையில், தக்கலை போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் அசோக் முன்னிலையில், தக்கலை டிஎஸ்பி பார்த்திபன் கியூஆர் கோடு ஸ்டிக்கரை ஆட்டோக்க ளில் ஒட்டி தொடங்கி வைத்தார். இதில் தக்கலை, அழகியமண்டபம் உள்ளிட்ட பகுிதளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. இது குறித்து டிஎஸ்பி பார்த்திபன் கூறுகையில், தக்கலை போலீஸ் சப் டிவிஷனில் முதல் கட்டமாக 300 ஆட்டோக்களில், ஒரே நாளில் கியூ ஆர் கோடு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. ஏனைய ஆட்டோக்களிலும் விரைவில் ஸ்டிக்கர் ஒட்டப்படும் என்றார்.