குமாரபுரம், செப். 11: தக்கலை அருகே புகழ்பெற்ற சுற்றுலா தலமான பத்மநாபபுரம் அரண்மனை உள்ளது. இந்த அரண்மனை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக விளங்கியது. குமரி மாவட்டம் தமிழ்நாடோடு இணைந்த பின்பும், இந்த அரண்மனை தற்போது வரை கேரள கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த அரண்மனையை பார்வையிட வெளி மாநிலம், நாடுகளில் இருந்து எராளமான சுற்றுளா பயணிகள் வந்து செல்கின்றனர். ஓணம் பண்டிகை தொடர் விடுமுறையில் ஆயிரத்திற்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள் அரண்மனையை பார்வையிட்டு சென்றுள்ளனர். தற்போது, தொடர்விடுமுறைக்கு பிறகு அரண்மனையை காண குறைவான சுற்றுலா பயணிகளே வருவதால், அரண்மனை வளாகம் வெறிச்சோடி காணப்படுகிறது.
+
Advertisement