நாகர்கோவில், டிச.9: நாம் தமிழர் கட்சி அருவிக்கரை ஊராட்சி பொறுப்பாளர் சதீஷ் என்பவர் தலைமையில் அந்த பகுதி மக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: அருவிக்கரை ஊராட்சி மாத்தூர் முக்கம்பாலவிளை பகுதியில் பிஎஸ்என்எல் நிறுவனம் அதிக கதிர்வீச்சை உமிழும் அலைபேசி கோபுரத்தை நிறுவும் முயற்சியில் ஈடுபட்டு முதற்கட்டமாக பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். இப்பகுதியில் செல்போன் கோபுரம் நிறுவப்பட்டால் இப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் மற்றும் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கதிர்வீச்சால் பாதிக்கப்படுவர், எனவே இந்த அலைபேசி கோபுரத்தை மக்கள் வசிக்காத பகுதியில் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
+
Advertisement


