மார்த்தாண்டம், செப்.9: மார்த்தாண்டம் அருகே பாகோடை அடுத்த குஞ்சு குட்டிதான் விளையை சேர்ந்தவர் தனராஜ். இவரது மனைவி உஷா நிர்மலா குமாரி(52). அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் உஷா நிர்மலா குமாரி மார்த்தாண்டம் பாலம் பகுதியில் சாலையை கடக்க நின்றதாக கூறப்படுகிறது. அப்போது நாகர்கோவிலில் இருந்து களியக்காவிளை நோக்கி வேகமாக வந்த பைக் சாலையில் நின்று கொண்டு இருந்த உஷா நிர்மலா குமாரி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த ஆசிரியையை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பைக்கில் மோதிவிட்டு நிற்காமல் சென்றவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement