நாகர்கோவில், டிச.7: தமிழ்நாடு பள்ளி கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் இந்திய மொழிகள் உற்சவம் டிசம்பர் 11ம் தேதி வரை நடத்திட ஒன்றிய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அனைத்து வகையான பள்ளிகளிலும் பள்ளிகளின் பயிற்றுமொழிகளிலேயே இச்செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் பள்ளிகளில் குறிப்பிட்டுள்ள செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டவுடன் மாவட்ட அளவில் செயல்பாடுகள் விபரங்களை அனுப்பி வைக்க வேண்டும். சுற்றுச்சூழல் செயல்பாடுகள், மொழி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த செயல்பாடுகள், மொழி மற்றும் இலக்கியம், மொழி பட்டறை, பேச்சு திறன் உள்ளிட்ட தலைப்புகளில் இந்த விழாக்கள் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement


