கருங்கல், நவ. 7: கிள்ளியூர் பேரூராட்சி வட்டக்கோட்டை பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. எனவே புதிய கட்டிடம் கட்டிதர அந்த பகுதி காங்கிரஸ் கட்சியினர், பொதுமக்கள், அங்கன்வாடி பணியாளர் ஆகியோர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. விடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அங்கன்வாடி மைய கட்டிடம் அமைக்க நிலம் இல்லாமல் இருந்தது. இந்தநிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் நிலத்தை இலவசமாக வழங்கினார். தொடர்ந்து புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்ட எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து ரூ.14.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.
அதைத்தொடர்ந்து புதிய அங்கன்வாடி கட்டிடம் அமைக்கும் பணிகள் நடந்து வந்தது. தற்போது வட்டக்கோட்டையில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் அமைக்கும் பணிகள் முடிவடைந்ததையடுத்து, புதிய கட்டிடத்தை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. குழந்தைகள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் ஒபிசி பிரிவு மாவட்ட தலைவர் சிஜின் ஆல்பர்ட், பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் ஆல்பர்ட் ஜெனில், கிள்ளியூர் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் டிஜூ, காங்கிரஸ் நிர்வாகிகள் கிளெமெண்ட், சுனிதா, ஏசுதாஸ், ஜோஸ், றோஸ்மேரி, சுபிஹெலன், சாமுவேல், பிரதாப்சிங், கிள்ளியூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் டெல்மா, ஜெயராணி, ஸ்டாலின், நிலம் கொடுத்தவரின் தந்தை ஜோசப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
