குலசேகரம், ஆக. 7: சுருளக்கோடு ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் சுருளக்கோடு புனித அந்தோனியார் உயர் நிலைப்பள்ளியில் நடைபெற்றது. திருவட்டார் வட்டாட்சியர் சுந்தரவல்லி தலைமை வகித்தார். திருவட்டார் வட்டார வளர்ச்சி அலுவலர் சசி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் செந்தூர்ராஜன் பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இதில் சுருளக்கோடு ஊராட்சி முன்னாள் தலைவர்கள் விமலா சுரேஷ், டெய்சி, முன்னாள் ஊராட்சி உறுப்பினர் சுரேஸ் மற்றும் 16 அரசு துறைகளை சேர்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
+
Advertisement