நித்திரவிளை, டிச.6: நித்திரவிளை அருகே முக்காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் சரிதா. இவருக்கும் சொர்ணம்மாள் என்பவருக்கும் சொத்து சம்பந்தமான பிரச்சனை இருந்து வந்தது. சம்பவத்தன்று மாலை சரிதா தனது தாயார் சந்திரிகா (74) என்பவருடன் சென்று கட்டுமான பணியை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது சொர்ணம்மாள் மற்றும் அவரது மகள் லீலா ஆகியோர் சேர்ந்து சந்திரிகாவை கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயமடைந்த சந்திரிகா குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விட்டு வந்துள்ளார். இது சம்பந்தமாக மகள் சரிதா (43), கொடுத்த புகார் மீது நித்திரவிளை போலீசார் சொர்ணம்மாள் மற்றும் லீலா மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement

