ஆரல்வாய்மொழி, டிச. 6: தோவாளை வட்டம் தாழக்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பயிர் காப்பீடு திட்டத்தின் விழிப்புணர்வு வாகன பேரணி நடைபெற்றது. கலெக்டர் அழகுமீனா அறிவுரை படியும், மாவட்ட வேளாண்மை உதவி இயக்குனர் பிரவீனா அறிவுறுத்தல் படியும் தாழக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட ரத வீதிகளில் பயிர் காப்பீடு திட்டத்திற்கான பயன்பாடுகளையும் அதில் விவசாயிகள் சேர்வதற்கான அறிவுரையும் கூறி இந்த விழிப்புணர்வு வாகன பிரசார பேரணி நடைபெற்றது. தோவாளை வட்டார உதவி வேளாண்மை அலுவலர் சண்முகவேல் கலந்து கொண்டு பயிர் காப்பீடு பற்றி விளக்கி கூறினார். தாழக்குடி பேரூராட்சி முன்னாள் தலைவரும் கவுன்சிலருமான ரோகினி அய்யப்பன் வாகன பேரணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் பிரம்மநாயகம் மற்றும் கவுன்சிலர் கார்த்திகேயன், விவசாய முன்னோடிகள் பலர் கலந்து கொண்டனர். பேரணி தாழக்குடி ரத வீதிகளில் சுற்றி தாழக்குடி கிராம நிர்வாக அலுவலகத்தில் முடிவடைந்தது.
+
Advertisement

