நித்திரவிளை, ஆக. 6 : முஞ்சிறை மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் ஊரம்பு பகுதியில் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. முஞ்சிறை ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பிரின்ஸ் தலைமை வகித்தார். முஞ்சிறை ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் விஜில் சிங், மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜெயசந்திர பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அட்வகேட் ஜெகநாதன், இளம் பேச்சாளர் ஜெபின், மாவட்ட பொருளாளர் ததேயு பிரேம்குமார், மாவட்ட பிரதிநிதி அப்துல் ரகுமான் உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். தமிழக அரசின் மீனவர் நலவாரிய உறுப்பினர் நீரோடி ஜோஸ், மாவட்ட பிரதிநிதிகள் சுனில் குமார், ஸ்டூவர்ட் ஜாண், முஞ்சிறை ஒன்றிய சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ஜார்ஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
+
Advertisement