நித்திரவிளை, டிச.5: குமரி மாவட்டத்தில் பரவலாக வெறிநாய் தொல்லை இருப்பதாகவும், அதனால் உள்ளாட்சி நிர்வாகம் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து கொல்லங்கோடு நகராட்சி பகுதியான நித்திரவிளை, காஞ்சாம்புறம், கே.ஆர்.புரம், பாலாமடம், கலிங்கராஜபுரம் ஆகிய பகுதிகளில் நேற்று காலை நகராட்சி ஆணையர் துர்கா உத்தரவின்படி சுகாதார ஆய்வாளர் பிரபாகரன் மேற்பார்வையில் கொல்லால் கால்நடை மருத்துவர் டைனி ப்றீதா சாலையோரம் சுற்றி திரிந்த 24 தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போட்டார். கொல்லங்கோடு நகராட்சி நிர்வாகம் சார்பில் இதுவரை 235 தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
+
Advertisement

