குளச்சல், டிச.5: குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய 8ம் வார்டு குறும்பனை சூசையப்பர் தெருவில் அலங்கார கற்கள் அமைக்க ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ.2 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து அலங்கார கற்கள் பதிக்கும் பணியை குறும்பனை பங்குத்தந்தை அன்பரசன் ஜெபம் செய்து தொடங்கி வைத்தார். ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணை தலைவர் எனல்ராஜ் தலமை வகித்தார். ஊர் தலைவர் வில்பிரட் மற்றும் காங். நிர்வாகிகள் வால்டர், மணி, ராபின், சுபின், ஜாண்சன், ஜோஸ், பாபின் அன்பிய நிர்வாகிகள் ஜெனோபா, மர்க்றித், மேரி லலிதா, சுபஜா மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
+
Advertisement

