நித்திரவிளை, டிச.5: நித்திரவிளை அருகே வளையசுற்று பகுதியை சேர்ந்தவர் கவுசல்யா (76). இவரது மகன் குமார் (57). கூலித்தொழிலாளி. மதுபழகத்திற்கு அடிமையாகி நோய்வாய்ப்பட்டு இருந்துள்ளார். கடந்த 1 ம் தேதி காஞ்சாம்புறம் பகுதியில் சாலையோரம் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதை பார்த்த உறவினர்கள் குமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை குமார் இறந்தார் .இது சம்பந்தமாக நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement

