குளச்சல், அக்.4: வெள்ளிச்சந்தை அருகே ரோட்டை கடக்க முயன்ற மூதாட்டி பைக் மோதி படுகாயம் அடைந்தார். வெள்ளிச்சந்தை அருகே உள்ள உன்னங்குளம் பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மனைவி கல்யாணி அம்மாள் (75). சம்பவத்தன்று இவர் உன்னங்குளம் அருகே பேயாடு - குருந்தன்கோடு சாலையை கடக்க முயன்றார். அப்போது, அந்த வழியாக காரங்காட்டை சேர்ந்த டேவிட் (45) என்பவர் ஓட்டி வந்த பைக் மோதியது. இதில் கல்யாணி அம்மாள் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வெள்ளிச்சந்தை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
+
Advertisement