சுசீந்திரம், டிச.3: நாகர்கோவில் அருகே வடிவீஸ்வரத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து. திருவனந்தபுரத்தில் உள்ள மூத்த மகன் வீட்டில் தங்கி இருந்தார். இந்தநிலையில் கடந்த 28ம் தேதி ஊருக்கு வந்தார். அப்போது ஏதோ மன வருத்தத்தில் இருந்தவர் செல்போனில் மனைவியிடம் பேசி உள்ளார். பின்னர் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார். இந்தநிலையில் கடந்த 30ம் தேதி சுசீந்திரம் அருகே உள்ள நல்லூர் தென்னந்தோப்பில் இசக்கிமுத்து விஷம் குடிந்து உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் அவரது மகன் கல்யாண்குமார் மற்றும் உறவினர்கள் சம்பவ இடம் சென்று உடலை மீட்டனர். இது பற்றி சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement

