மார்த்தாண்டம், டிச. 2: வன்னியூர் நடுதலைவிளை வீடு பகுதியில் வசித்து வருபவர் சுனில் குமார் (51) கார் மெக்கானிக். சம்பவத்தன்று துப்புறமூலை பஸ் நிறுத்தம் அருகே, சென்று கொண்டிருந்த போது, எதிரில் வந்த ரேஷன் கடையில் எடை போடும் தொழில் செய்து வரும் அனில் குமார்(42) மற்றும் மரக்கடையில் வேலை செய்து வரும் விஜயகுமார்(42) ஆகிய 2 பேரும் சேர்ந்து குமாரை தாக்கியுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த சுனில் குமார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்தநிலையில், சம்பவம் குறித்து களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் சுனில் குமார் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார், அனில் குமார் மற்றும் விஜயகுமார் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
+
Advertisement

