தக்கலை, டிச.2: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி பத்மநாபபுரம் நகராட்சி சேர்மன் அருள்சோபன் நகரப்பகுதியில் நல உதவிகளை வழங்கி 3 நாட்கள் கொண்டாடினார். முதல் நாள் நகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு நல உதவிகள் மற்றும் பரிசுகள் வழங்கியதுடன் அறுசுவை விருந்தும் பறிமாறப்பட்டது. இரண்டாம் நாள் நகராட்சி பகுதியில் உள்ள நலிவுற்ற மக்களுக்கு பல்வேறு நல உதவிகளை வழங்கினார். தையல் இயந்திரம், நடைபாதை வியாபாரிகளுக்கு தள்ளுவண்டி, சமையல் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டது. 3வது நாளாக நடைபெற்ற நிகழ்ச்சியில் தக்கலையில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடை, பரிசுகள், நல உதவிகள் வழங்கியதுடன் விருந்தும் பறிமாறப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகர திமுக செயலாளர் சுபிஹான், நகர அவை தலைவர் எட்ரின், பொருளாளர் ராம், திமுக பிரமுகர்கள் பிரஜீஸ், சச்சின், அனீஸ், நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
+
Advertisement

