அஞ்சுகிராமம், அக். 1: அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் உள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் ஆயுதபூஜை நடந்தது. கல்லூரி தலைவர் நீலமார்த்தாண்டன், துணை தலைவர் முனைவர் நீலவிஷ்ணு, நிர்வாக இயக்குனர் முனைவர் பிளஸ்ஸி ஜியோ, முதல்வர் முனைவர் ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.விழாவில் அனைத்து துறை சார்பில் பேராசிரியர்கள், மாணவர்களும் இணைந்து கொலு வைத்து கொலு பூஜை நடத்தினர். கல்லூரியின் ஆய்வக கருவிகளுக்கும் பூஜை நடத்தப்பட்டது. மாணவர்கள், பேராசிரியர்களுக்கு கல்லூரி நிர்வாகத்தில் ஆயுதபூஜை வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை அனைத்து துறை பேராசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.
+
Advertisement