Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

குமரி கடலுக்குள் விழுந்து மாயமான மீனவரை தேடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் முதல்வருக்கு ராஜேஷ்குமார் எம்எல்ஏ கடிதம்

கருங்கல், ஜூன் 4: கடலில் விழுந்து மாயமான மீனவரை தேடும் பணியை தீவிரப்படுத்தவேண்டும் என்று கோரி ராஜேஷ்குமார் எம்எல்ஏ தமிழ்நாடு முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மீன்வளம் - மீனவர் நலத்துறை அமைச்சர், குமரி மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு, ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இனையம் பகுதியை சேர்ந்தவர் லேனடிமை (48). இவர் தனக்கு சொந்தமான கட்டு மரத்தில் ஜூன் 1 ம் தேதி மாலை தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலில் சென்றார். அவர் நேற்று முன்தினம் கரை திரும்பியிருக்க வேண்டும். ஆனால் கரை திரும்பாததால் அவரது குடும்பத்தார், மீனவர்கள் கடலில் தேடும் போது லேனடிமை கடலுக்குள் தவறி விழுந்து மாயமான நிலையில் மணக்குடி அருகே உள்ள பள்ளம் பகுதியில் அவரது கட்டு மரம் மட்டும் கடலில் மிதந்து கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவரது குடும்பத்தினர் பெரிதும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். ஆகவே கடலோர காவல்படை, இந்திய கடற்படை இணைந்து போர்கால அடிப்படையில் தேடுதல் பணிகளை தீவிரபடுத்தி கட்டு மரத்தில் இருந்து கடலில் தவறி விழுந்து மாயமான மீனவரை கண்டுபிடித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.