குலசேகரம், ஜூலை 28: குலசேகரம், கைதறக்கோணம் பகுதியை சேர்ந்தவர் ரசல்ராஜ் (52). கூலி
தொழிலாளி. இவர் கடந்த 4 நாட்களுக்கு முன் அவருக்கு சொந்தமான ஸ்கூட்டரில் குலசேகரம், மாமூடு பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது சாரல் மழை பெய்ததால் அப்பகுதியில் உள்ள ஒரு டீக்கடை முன்பு ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு டீ குடிக்க சென்றுள்ளார். அப்போது ஸ்கூட்டரின் சாவியை வண்டியில் இருந்து எடுக்க மறந்துள்ளார். டீ குடித்து விட்டு வந்து பார்த்தபோது ஸ்கூட்டரை காணவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது மழை கோட் மற்றும் ஹெல்மெட் அணிந்த மர்ம நபர் ஸ்கூட்டரை திருடி சென்றது தெரிந்தது. இது குறித்து ரசல்ராஜ் குலசேகரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து ஸ்கூட்டரை திருடி சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.