Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஓடும் பஸ்சில் மூதாட்டியின் 4 பவுன் நகை மாயம்

தக்கலை,ஜூலை 25: ஓடும் பஸ்சில் மூதாட்டியின் நகை மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.  தக்கலை அருகே வில்லுக்குறி பண்டாரக்காடை சேர்ந்தவர் தங்கம் (65). இவர் வில்லுக்குறியில் இருந்து தக்கலைக்கு தடம் எண் 7 சி பஸ்சில் வந்து கொண்டிருந்தார் .தக்கலை பஸ் நிலையம் வந்ததும் பஸ்சில் இருந்து இறங்கி பார்த்த போது கழுத்தில் கிடந்த 4 பவுன் நகை மாயமாகி இருந்தது. இது குறித்து தங்கம் தக்கலை போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.