குளச்சல், ஜூலை 25: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மீனவர் கிராமங்களில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (விடுதலை) சார்பில் குளச்சல் அருகே கோடிமுனை மீனவர் கிராமத்தில் கையெழுத்து இயக்கம் நடந்தது. மாவட்ட செயலாளர் எஸ்.எம்.அந்தோணி முத்து கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்.
இதில் ஏ.ஐ.சி.சி.டி.யு. மாவட்ட தலைவர் சுசீலா, செயலாளர் ரஞ்சன், மீனவர்கள் சங்கம் கோடிமுனை செயலாளர் அருள்ராஜ், கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட துணை தலைவர் டென்னிஸ் சுமித்ரன், ராஜேஷ், ஆல்பி, ஜான்சன், ஆண்டனி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.