குளச்சல், ஆக. 1: குளச்சல் அருகே உள்ள லியோன் நகரை சேர்ந்தவர் புஷ்பராஜ். இவரது மகன் பிஜோஷியாம் (25). மீனவர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த தனிஷ் (27) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று பிஜோஷியாம் அங்குள்ள ஆலயம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற தனிஷ், சீலன் (32), அபிஷ் (27) மற்றும் ஜெரின் (37) ஆகியோர் சேர்ந்து பிஜோஷியாமை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த பிஜோஷியாம், குளச்சல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பின்னர் இதுகுறித்து அவர் குளச்சல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் மீனவரை தாக்கிய தனிஷ், சீலன், அபிஷ் மற்றும் ஜெரின் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement