நாகர்கோவில், ஆக. 18: குமரி மாவட்டம் வழியாக செல்லும் பல்வேறு ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று (18ம் தேதி) முதல் அமலுக்கு வருகிறது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ரயில் எண் 16128 குருவாயூர்- சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ், சிறையின்கீழ் நிறுத்தத்தில் இன்று முதல் அதிகாலை 4.19 மணிக்கு நின்று 4.20 மணிக்கு புறப்படும். ஹரிப்பாடு ரயில் நிலையத்தில் அதிகாலை 2.45க்கு நின்று 2.46க்கு புறப்படும்.
ரயில் எண் 16127 சென்னை எழும்பூர்- குருவாயூர் எக்ஸ்பிரஸ், ஹரிப்பாடு நிறுத்தத்தில் இன்று முதல் அதிகாலை 2.24க்கு நின்று 2.25க்கு புறப்படும். ரயில் எண் 16861 புதுச்சேரி-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், வள்ளியூரில் வரும் 24ம் தேதி முதல் காலை 1.43க்கு நின்று 1.44க்கு புறப்படும். ரயில் எண் 16729 மதுரை - புனலூர் எக்ஸ்பிரஸ், நாங்குநேரியில் இன்று முதல் அதிகாலை 2.20க்கு நின்று 2.21க்கு புறப்படும், ஆரல்வாய்மொழியில் அதிகாலை 2.51க்கு நின்று 2.52க்கு புறப்படும்.
ரயில் எண் 16730 புனலூர்-மதுரை எக்ஸ்பிரஸ், நாங்குநேரியில் இன்று முதல் இரவு 10.55க்கு நின்று 10.56க்கு புறப்படும். ஆரல்வாய்மொழியில் 9.54க்கு நின்று 9.55க்கு புறப்படும்.
ரயில் எண் 16321 நாகர்கோவில்-கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ், மேலப்பாளையத்தில் இன்று முதல் காலை 8.51க்கு நின்று 8.52க்கு புறப்படும். ஆரல்வாய்மொழியில் 8.13க்கு நின்று 8.14க்கு புறப்படும். இருகூரில் மாலை 6.24க்கு நின்று 6.25க்கு புறப்படும். சிங்காநல்லூர் ஹால்ட் ஸ்டேஷனில் மாலை 6.19க்கு நின்று 6.20க்கு புறப்படும்.