நாகர்கோவில், ஆக. 4: மார்த்தாண்டம் அருகே முள்ளங்கனாவிளையில் உள்ள அருணாச்சலா ஹைடெக் பொறியியல் கல்லூரியில் உலக இளைஞர் திறன் தின விழா நடைபெற்றது.
இதில் செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் திறன்கள் மூலம் இளைஞர்களின் திறன் மேம்படுத்துதல் குறித்து செயற்கை நுண்ணறிவு துறை சார்ந்த நிபுணர்கள் செயல்முறை விளக்கங்களுடன் பயிற்சியளித்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறை தலைவர் ஆஷி வி டேனியல் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.