Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மார்த்தாண்டம் அருகே ஓடும் பஸ்சில் பெண்ணின் நகை மாயம்

மார்த்தாண்டம், ஆக.4: மார்த்தாண்டத்தை அடுத்த பாகோடு தேனாம்பாறை பிலாவல்கல்விளை பகுதியை சேர்ந்தவர் ஜாண் ததேயு மனைவி சஜீதா (38). இவர் பழுதடைந்த தனது செயினை சரி செய்வதற்காக ஒரு பர்ஸில் வைத்து பையில் எடுத்து சென்றுள்ளார். ஊரில் இருந்து ஆட்டோவில் மார்த்தாண்டம் வந்துள்ளார். பின்னர் நாகர்கோவில் செல்லும் தடம் எண் 311 பஸ்சில் ஏறி கல்லுத்தொட்டி பஸ் நிறுத்தத்தில் இறங்கி உள்ளார்.

அதன்பின் பர்சை பார்த்த போது நகை மாயமாகி இருந்தது. பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சஜீதா, மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.