நாகர்கோவில், ஜூலை 30: குமரி மாவட்டத்தில் அரசு துறை சார்பில் பொதுமக்களுக்கு நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டு அவற்றுக்கு தீர்வு காணப்படும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று (30ம் தேதி) முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி கன்னியாகுமரி நகராட்சி 14, 15 வது வார்டுக்கு கன்னியாகுமரி நகராட்சி வளாகம், களியக்காவிளை பேரூராட்சிக்கு களியக்காவிளை சிஎஸ்ஐ கம்யூனிட்டி ஹால், கருங்கல் பேரூராட்சிக்கு கருமாவிளை சிஎஸ்ஐ சமூக நலக்கூடம், அருவிக்கரை ஊராட்சிக்கு அருவிக்கரை புனித ஜோசப் சமூக நலக்கூடம், குருந்தன்கோடு ஊராட்சிக்கு குருந்தன்கோடு பூமி பாதுகாப்பு சங்க கட்டிடடம், திருப்பதிசாரம் ஊராட்சிக்கு திருப்பதிசாரம் அன்னை செல்லம்மாள் சிபிஎஸ்இ பள்ளி ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளது. முகாம்களில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை விண்ணப்பங்களை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement