மார்த்தாண்டம், மே 15: மார்த்தாண்டம் அருகே பம்மம் நிரவுதட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் ரெத்தினதாஸ்(51). கொத்தனார். அவரது மனைவி சாவித்திரி (49). பம்மம் பகுதியில் உள்ள கடையில் பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் ரெத்தின தாசுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ரெத்தினதாஸ் மிகுந்த மன உளைச்சலில் இருந்தாராம். சம்பவத்தன்று காலை சாவித்திரி வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் ரெத்தினதாஸ் மட்டும் இருந்துள்ளார். மதியம் சாப்பிடுவதற்காக சாவித்திரி வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் படுக்கையறையில் மின்விசிறி மாட்டும் கொக்கியில் நைலான் கயிற்றால் தூக்கில் தொங்கியவாறு ரெத்தினதாஸ் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement


