நாகர்கோவில்,ஜூலை 25: ராதாபுரம் தி இந்தியன் வேளாண்மைக் கல்லூரியின் ஒன்பதாவது ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. தலைமை விருந்தினராக திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக நடிகர் அதிர்ச்சி அருண் கலந்து கொண்டார். கல்லூரி தலைவர் முனைவர் எஸ்.ஏ. ஜாய் ராஜா தலைமை தாங்கினார். மாணவர் மன்ற செயலாளர் பேபிலட்சுமி அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் மாணிக்கவாசகம் ஆண்டு அறிக்கை வாசித்தார்.
அதில் 2024-2025 ம் கல்வி ஆண்டிற்கான மாணவர்களின் சாதனைகளை பட்டியலிட்டார். கல்லூரி தலைவர் ஜாய் ராஜா மாணவர்களை வாழ்த்தி பேசினார். தலைமை விருந்தினர் எஸ்.பி. சிலம்பரசன் ஆண்டு விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி தலைமையுரை ஆற்றினார். நடிகர் அதிர்ச்சி அருண் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிக்கொண்டுவர ஊக்குவிக்கும் வகையில் சிறப்புரை ஆற்றினார். இறுதியாக மாணவர் மன்ற துணை செயலாளர் நைலேஷ்ராஜ் நன்றி கூறினார்.