Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பூதப்பாண்டி அருகே வண்டல் மண் கடத்திய 2 டெம்போக்கள் பறிமுதல்

பூதப்பாண்டி, ஜூலை 11: பூதப்பாண்டி அருகே வண்டல் மண் கடத்திய 2 டெம்போக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பூதப்பாண்டி எஸ்.ஐ சத்தியசோபன் தலைமையில் போலீசார் காரியாங்கோணம் குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மண் அள்ள அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் கடந்து 2 டெம்போக்களில் டிரைவர்கள் வண்டல் மண் ஏற்றி கொண்டிருந்தனர். போலீசார் வருவதை பார்த்ததும், 2 டெம்போக்களின் டிரைவர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து டெம்போக்களை பறிமுதல் செய்த போலீசார் அதன் டிரைவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.