நாகர்கோவில், ஆக. 5: திருவட்டார் அருகே உள்ள களத்துநடையை சேர்ந்தவர் விஜயன். இவரது மனைவி வசந்தா(48). இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். விஜயனின் தந்தையின் சகோதரர் மாணிக்கம்(82), விஜயனின் பராமரிப்பில் இருந்தார். இந்த நிலையில் மாணிக்கம் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்தார்.
மாணிக்கத்தின் உடலை வீட்டின் அருகே தகனம் செய்தனர். சில நாட்கள் கடந்த நிலையில் விஜயனின் பக்கத்து வீட்டை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் சுந்தரதாஸ் என்பவர் வீட்டின் அருகே எப்படி உடலை தகனம் செய்யலாம் என தகராறு செய்தார். இது தொடர்பாக அவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்தது.