களியக்காவிளை பேரூராட்சியில் ரூ.1.25 கோடியில் சாலை சீரமைக்கும் பணி தாரகை கத்பர்ட் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
மார்த்தாண்டம், நவ. 15: களியக்காவிளை பேரூராட்சிக்குட்பட்ட குன்னுவிளை முதல் கைதக்குழி செல்லும் சாலை சேதமடைந்து வாகன ஓட்டிகள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. இந்த சாலையை சீரமைக்ககோரி தாரகை கத்பர்ட் எம்எல்ஏவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து எம்எல்ஏ சேதமடைந்த சாலையை பார்வையிட்டதுடன், இது தொடர்பாக அமைச்சரிடம் பரிந்துரை செய்தார்.
இதனை தொடர்ந்து ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் குன்னுவிளை- கைதக்குழி சாலையை சீரமைக்க அரசு தரப்பில் இருந்து நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து நடந்த நிகழ்ச்சியில் தாரகை கத்பர்ட் எம்எல்ஏ கலந்து கொண்டு, புதிய சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். இதில் ராஜேஷ், மதுசூதனன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
