குளச்சல்,நவ.15 : வெள்ளிச்சந்தை அருகே தளவாய்புரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார்(55). இவர் செட்டிக்குளம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டிரைவராக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று வெள்ளிச்சந்தைக்கு சென்று மருந்து வாங்கிவிட்டு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த பைக் ராஜ்குமார் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து அவரது மகள் பிரீத்தி (24) வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் வேகமாக பைக் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியதாக சூரப்பள்ளம் பகுதியை சேர்ந்த ஸ்ரீராம் (24) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் ராஜ்குமார் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்து போனார். இதையடுத்து போலீசார் இந்த வழக்கை விபத்து மரண வழக்காக மாற்றி உள்ளனர்.
