கருங்கல், நவ.15 : ஆற்றூர் சந்திப்பில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி ராஜீவ் காந்தி சிலை முன் நேருவின் திருவுருவ படம் வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால் சிங் தலைமை வகித்தார். தாரகை கத்பர்ட் எம்எல்ஏ, ஜவஹர் பால்மஞ்ச் அகில இந்திய ஒருங்கிணைப்பாளரும், காங்கிரஸ் மாநில துணை தலைவருமாகிய டாக்டர் சாமுவேல் ஜார்ஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. காங்கிரஸ் நிர்வாகிகள் டாக்டர் தம்பி விஜயகுமார், ஜெகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
