குளச்சல், டிச.8: மணவாளக்குறிச்சி அருகே கடியபட்டணம் ஜாண்பால் தெருவை சேர்ந்தவர் பேதுரு (81). நேற்று முன் தினம் சாப்பிவிட்டு வெளியே சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் பேதுருவை அப்பகுதி முழுவதும் தேடினர். பாத்திமா தெரு கடற்கரை பகுதியில் தேடி செல்லும்போது பேதுரு அங்கு மயங்கி கிடந்தார்.
உடனே அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பேதுரு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அவரது மகன் சுதாகர் டிட்டோ மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயலட்சுமி விசாரணை நடத்தி வருகிறார்.


