செங்கல்பட்டு, அக்.31: திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்தவர் நிர்மல் குமார் (35). இவர் குடும்பத்துடன் அவரது உறவினர் வீட்டு வீசேஷத்திற்கு புதுச்சேரிக்கு காரில் சென்றார். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, காட்டாங்கொளத்தூர் சிவானந்தா குருகுலம் அருகில் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்றபோது காரின் முன்பக்கத்தில் இருந்து புகை வருவதை கண்ட நிர்மல்குமார் காரை நிறுத்தி குடும்பத்தினரை உடனடியாக காரில் இருந்து வெளியே இறக்கினார். சில நொடிகளில் கார் தீப்பற்றி எரியத் தொடங்கி, மளமளவென தீ கார் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. மறைமலைநகர் தீயணைப்பு தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து தண்ணீரை பீய்ய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனாலும் கார் முழுவதும் எரிந்து எலும்புக்கூடானது. இச்சம்பவம் குறித்து மறைமலைநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement 
 
  
  
  
   
