செங்கல்பட்டு, அக். 30: 2026 தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக பாஜ அரசு கொண்டுவந்துள்ள எஸ்.ஐ.ஆர். என்ற வாக்களர் திருத்த சுருக்கமுறை திட்டத்தினை எதிர்த்து திமுக அரசு வரும் 2ம் தேதி அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளையும் ஆலோசனை கூட்டத்திற்கு அழைத்துள்ளது. இந்தநிலையில் எஸ்ஐஆர் திட்டம் குறித்து செங்கல்பட்டு கலெக்டர் சினேகா தலைமையில் நேற்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், பாஜ உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனர். இதில் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு வாக்களர் திருத்தம் குறித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். அதனை ஏற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
+
Advertisement
