காஞ்சிபுரம்,செப்.30: காஞ்சிபுரம் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி, அக்.2ம்தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் மற்றும் உரிம நிபந்தனைகளின்படி அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு டாஸ்மார்க் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள் கீழ்கண்ட நாளில் நாள் முழுவதுமாக மூடப்பட வேண்டும் என்ற அரசின் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காந்தி ஜெயந்தி தினமான ஆக்.2ம்தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள் (பார்) ஆகியவை நாள் முழுவதுமாக மூடப்பட வேண்டுமென காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
+
Advertisement