வளசரவாக்கம், அக்.28: முருகன் கோயில்களில் நேற்று சூரசம்ஹாரம் நடைபெற்றதையொட்டி நேற்று கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை பல மடங்கு உயர்ந்தது. அதன்படி, ஒரு கிலோ மல்லி 1,300 ரூபாயில் இருந்து 1,500க்கும், ஐஸ் மல்லி 1,100 ரூபாயில் இருந்து 1,300க்கும், முல்லை மற்றும் ஜாதிமல்லி 1000 ரூபாயில் இருந்து 1,200க்கும், கனகாம்பரம் 300 ரூபாயில் இருந்து 600க்கும், அரளி 100 ரூபாயில் இருந்து 400க்கும், சாமந்தி 100 ரூபாயில் இருந்து 160க்கும், சம்பங்கி 50 ரூபாயில் இருந்து 100க்கும், பன்னீர் ரோஸ் 100 ரூபாயில் இருந்து 140க்கும், சாக்லேட் ரோஸ் 70 ரூபாயில் இருந்து 160க்கும் விற்பனை செய்யப்பட்டது.
+
Advertisement
