உத்திரமேரூர், நவ.27: உத்திரமேரூர் ஒன்றிய திமுக சார்பில், உத்திரமேரூர் அடுத்த தண்டரை, மானாம்பதி கண்டிகை, இளநகர் ஆகிய கிராமங்களில் நேற்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தெருமுனை கூட்டங்கள் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். நகரச் செயலாளர் பாரிவள்ளல், பேரூராட்சி தலைவர் பொன்.சசிகுமார், ஒன்றிய கவுன்சிலர்கள் தயாளன், சுகுணா சுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை பேச்சாளர் அத்திப்பட்டு சாம்ராஜ் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில், காஞ்சி திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு சிறப்புரையாற்றி மெகா சைஸ் கேக் வெட்டியும், ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கியும் துணை முதல்வர் பிறந்தநாள் மகிழ்ச்சியோடு கொண்டாடப்பட்டது. நிகழ்வின்போது இளைஞரணி அமைப்பாளர் அன்புராஜா, சிறுபான்மையினர் நல உரிமைபிரிவு மாவட்டத் துணை அமைப்பாளர் தாமஸ், நிர்வாகிகள் மோகன்தாஸ், ஏழுமலை, பழனி, சுப்புராயன் உட்பட பலர் பங்கேற்றனர்.
+
Advertisement

