மாமல்லபுரம், நவ.27: இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாளையொட்டி இந்தியா முழுவதும் 75 புராதன சின்னங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் மீது லேசர் ஒளி மூலம் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் கண்டு ரசிக்கும் வகையில், சர்தார் வல்லபாய் படேலின் உருவம் ஒளிரச் செய்ய வேண்டும் என ஒன்றிய அரசு தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டது. அதன்படி, மாமல்லபுரம் வெண்ணெய் உருண்டை பாறை மீது நேற்று சர்தார் வல்லபாய் படேலின் உருவமும், அருகில் தேசியக்கொடி கலரில் ஒற்றுமை, நடைபயணம், ஒற்றுமையான பாரதம், தன்னிறைவான பாரதம் என்ற வாசகத்துடன் லேசர் ஒளி மூலம் ஒளிரூட்டப்பட்டது.
+
Advertisement

