திருப்போரூர், செப்.27: கேளம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.1.70 கோடியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய கேளம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் பள்ளி கட்டிடம் கட்ட ரூ.1 கோடியே 70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ராணி எல்லப்பன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியர் ராஜசேகரன் வரவேற்றார். திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, ஒன்றிய குழு தலைவர் எல்.இதயவர்மன் ஆகியோர், புதிய பள்ளிக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி பேசினர். இந்நிகழ்வில் ஒன்றிய குழு உறுப்பினர் திவ்யா வினோத்கண்ணன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் பிரியா, துணை தலைவர் முகமது சுல்தான், ஊராட்சி துணை தலைவர் பாஸ்கரன், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
+
Advertisement